செந்தமிழ்சிற்பிகள்

பெ.நா.அப்புஸ்வாமி (1891 - 1986)

பெ.நா.அப்புஸ்வாமி

(1891 - 1986)

தமிழறிஞர், அறிவியல் தமிழ் முன்னோடி, மொழிபெயர்ப்பாளர்

 

திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ. பட்டமும் சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றார். பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் நூல்கள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

முக்கிய நூல்கள்

தமிழ்

அணுவின் கதை

பூமியின் உள்ளே

சர்வதேச விஞ்ஞானிகள்

பயணம் அன்றும் இன்றும்

மொழிபெயர்ப்பு

அற்புத உலகம்

விஞ்ஞானமும் விவேகமும்

அணுசக்தியின் எதிர்காலம்

கால எந்திரம்

வங்க இலக்கிய வரலாறு

வசனமும் கவிதையும்

ஆங்கிலம்

A Bunch of Essays on Tamil Literature

மொழிபெயர்ப்பு

Tamil Verse in Translation

Kurinji-p-pattu

Muttollayiram

 

ஆதாரம்: அறிவியல் தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி(2003) – சா.கிருட்டிணமூர்த்தி, மு.வளர்மதி, ஆ.தசரதன், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்.






















QR Code

 

பெ.நா.அப்புஸ்வாமி

(1891 - 1986)

பெ. நா. அப்புசாமி (திசம்பர் 31,1891-மே 16,1986) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ் , ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்

படைப்புகள்

பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பேனா என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதினார். இவர் 25 அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

மின்சாரம் (நூல்)

வானக்காட்சி (நூல்)

இன்றைய விஞ்ஞானமும் நீங்களும் (நூல்)

அணுசக்தியின் எதிர்காலம் (நூல்)

ராக்கெட்டும் துணைக்கோள்களும் (நூல்) பாரதியார் கவிதைகள், சங்கப்பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இசையில் ஆர்வம் கொண்டவர். அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றியவர். தமிழில் வெளிவந்த முதல் அறிவியல் இதழான தமிழ் நேசன் இதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அறிவியல் தமிழர் என்று போற்றப்படுபவர். மதுரைப் பல்கலைக் கழகத்தில், தமிழ்ப்பேரவைச் செம்மல் எனும் பட்டம் பெற்றுள்ளார்.

சர்வதேச விஞ்ஞானிகள்

அறிவியல் கதைகள், போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்புகள்

அறிவியல் நூல்கள் மட்டும் அல்லாது, பாரதியார் கவிதைகள், சங்கப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

 

இசைத் துறை

இசையில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பல இசை விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

 

முக்கிய நூல்கள்

தமிழ்

அணுவின் கதை

பூமியின் உள்ளே

சர்வதேச விஞ்ஞானிகள்

பயணம் அன்றும் இன்றும்

 

ஆங்கிலம்

A Bunch of Essays on Tamil Literature

மொழிபெயர்ப்பு

Tamil Verse in Translation

Kurinji-p-pattu

Muttollayiram